உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முறைத்து பார்த்ததால் தகராறு தாக்குதலில் வாலிபர் பலி

முறைத்து பார்த்ததால் தகராறு தாக்குதலில் வாலிபர் பலி

ராஜகோபால்நகர்: முறைத்துப் பார்த்ததால் தாக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெங்களூரு நந்தினி லே - அவுட்டை சேர்ந்தவர் அருண்குமார், 24. இவர், கடந்த 19ம் தேதி இரவு நண்பர் ரோஹித்துடன், ராஜகோபால்நகரில் உள்ள லவகுசா நகருக்கு சென்றார். தள்ளுவண்டி கடையில் இருவரும் பானிபூரி சாப்பிட்டனர். கடைக்கு வந்த நான்கு வாலிபர்கள், அருண்குமாரை பார்த்துக் கொண்டே இருந்தனர். பதிலுக்கு அருண்குமார், நான்கு பேரையும் முறைத்து பார்த்துள்ளார். கோபம் அடைந்த நான்கு பேரும், 'எதற்காக எங்களை முறைத்து பார்த்தாய்?' என்று கேட்டு தகராறு செய்து, பைக்கில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்து, அருண்குமாரை சரமாரியாக தாக்கினர். தடுக்க முயன்ற ரோஹித்தையும் தாக்கிவிட்டு தப்பினர். தலையில் காயம் அடைந்த அருண்குமார்,் விக்டோரியா அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ