உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புதையலுக்கு ஆசைப்பட்டு கோவில் கோபுரம் சேதம்

 புதையலுக்கு ஆசைப்பட்டு கோவில் கோபுரம் சேதம்

முல்பாகல்: முல்பாகலின் ஹொசராய சுவாமி கோவிலில் புதையல் இருப்பதாக கருதி, கோவில் கோபுரத்தை மர்ம கும்பல் சேதப்படுத்தி உள்ளது. குருபர் சமூகத்தினருக்கான கோவில், முல்பாகல் ஹொசராய சுவாமி கோவில் உள்ளது. பல நுாறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இக்கோவிலில் ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேவர பூஜை, விஜயதசமி பூஜைகளின் போது மட்டுமே திறக்கப்படும். மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை. பழமை வாய்ந்த இக்கோவிலில் தங்கம் வைரம், வெள்ளி உட்பட பெரும் புதையல் இருப்பதாக நினைத்து மர்ம கும்பல், ஆயுதங்களால் கோவிலின் அஸ்திவாரத்தில் 10 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். கோவிலின் சுவர்கள் சேதம் அடைந்து உள்ளது. கோவிலின் மேற்கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைவதற்கு பெரிய துளையும் போட்டுள்ளனர். இது பற்றி முல்பாகல் போலீஸ் நிலையத்தில் கோவில் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ