புதிய திட்டத்துக்கு டெண்டர் கோரல்
பெங்களூரு: தன் புதிய திட்டத்துக்கு பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், டெண்டர் கோரி உள்ளது. நகரின் வருங்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு, சாலை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக ஆர்.எம்.பி., எனும் திருத்தப்பட்ட மாஸ்டர் பிளான் 2041ஐ பி.டி.ஏ., உருவாக்கி உள்ளது. இதற்காக டெண்டர்களையும் கோரி உள்ளது. டெண்டர் எடுக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 30ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஏற்கனவே, ஆர்.எம்.பி., - 2031 எனும் மேம்பாட்டு திட்டத்தை 2020ம் ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்திற்கு போதிய ஆதரவு இல்லாதது, விமர்சனங்கள் போன்ற பல காரணங்களால் திட்டம் பாதியிலே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.