உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தாதாக்களுடன் நடிகருக்கு தொடர்பு?

தாதாக்களுடன் நடிகருக்கு தொடர்பு?

பெங்களூரு: நடிகர் தன்வீர் கவுடா, நிழல் உலக தாதாக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி, நடிகர் தன்வீர் கவுடா இடையிலான பண விவகார பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தன்வீர் கவுடா, நிழல் உலக தாதாக்கள் மன்வித் ராய், கவுரவ் ஷெட்டி ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி உள்ளது. தாதாக்கள் மூலம் விஜயலட்சுமியை மிரட்ட தன்வீர் கவுடா முயற்சி செய்கிறாரா என்றும், சமூக வலை தளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், சமூக வலைதளம், மீடியாக்கள் மூலம் விஜயலட்சுமி பற்றி தன்வீர் கவுடா பேசுவதற்கு, சிறையில் உள்ள தர்ஷன் வக்கீல்கள் மூலம் தடை வாங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ