உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரின் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே நோக்கம்

பெங்களூரின் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே நோக்கம்

பெங்களூரு: ‘‘பெங்களூரில் நிலவும் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதே, மாநில அரசின் நோக்கம்,’’ என, முதல்வர் சிவகுமார் கூறினார். பெங்களூரு குஞ்ஜூர் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால், வெள்ள கட்டுப்பாடு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. முதல்வர் சிவகுமார், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் சிவகுமார் பேசியதாவது: பெங்களூரில் நிலவும் சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதே மாநில அரசின் நோக்கம். பெங்களூரில் நடக்கும் மேம்பாட்டு பணிகளில் அரசியல் இல்லை. நகரின் சாலை மேம்பாட்டிற்கு, புதிய முறை செயல்படுத்தப்படும். ரியல் எஸ்டேட் மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில தொகுதிகளில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். வளர்ச்சி பணிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக 2,000 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இது வெறும் அடிக்கல் நாட்டு விழா மட்டுமல்ல. மக்களின் நீண்ட நாள் கனவு. பெங்களூரில் கடந்த மூன்றாண்டுகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடந்து உள்ளன. பெங்களூரு வரலாற்றிலேயே வளர்ச்சி பணிகளுக்கு மிகப்பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !