உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாட்டிலேயே முதன் முறையாக நடமாடும் காவிரி திட்டம் துவக்கம்

நாட்டிலேயே முதன் முறையாக நடமாடும் காவிரி திட்டம் துவக்கம்

பெங்களூரு: குடிநீர் டேங்கர் மாபியாவுக்கு கடிவாளம் போடவும், அனைவருக்கும் காவிரி நீர் கிடைக்கும் நோக்கிலும், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம், 'நடமாடும் காவிரி' திட்டத்தை கொண்டு வந்துள்ளது.பெங்களூரு விதான்சவுதா முன்பாக, நேற்று நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் சிவகுமார் காவிரி நீர் விநியோகிக்கும் டேங்கரில் தண்ணீர் அருந்தி, நடமாடும் காவிரி டேங்கர்களை துவக்கிவைத்தார்.அவர் பேசியதாவது:நடமாடும் காவிரி குடிநீரை, குடிநீர் வாரியத்தின் வெப்சைட் மற்றும் மொபைல் செயலி வழியாக முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள், சுத்தமான காவிரி நீர் அவரவர் வீட்டு வாசலை வந்தடையும். இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டது, நாட்டிலேயே முதன் முறை.காவிரி குடிநீர் இணைப்பு பெறும் கட்டணத்தை, ஒரே முறையில் செலுத்துவது கஷ்டம் என, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கூறினர்.எனவே அவர்களுக்காக 12 தவணைகளில் இணைப்பு கட்டணத்தை செலுத்தும் திட்டமும் நேற்று துவக்கப்பட்டுள்ளது.மொத்த கட்டணத்தில் 20 சதவீதத்தை செலுத்தி, காவிரி குடிநீர் இணைப்பு பெறலாம். மீத தொகையை 12 தவணைகளில் செலுத்தலாம். 600 சதுர அடி கொண்ட சிறிய வீட்டினர், 1,000 ரூபாய் செலுத்தி, காவிரி குடிநீர் இணைப்பு பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி