உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கூட்டத்தொடரால் மக்களுக்கு நன்மை இல்லை ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூரு அதிருப்தி

 கூட்டத்தொடரால் மக்களுக்கு நன்மை இல்லை ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூரு அதிருப்தி

யாத்கிர்: 'பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடக்கும், சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரால், வட மாவட்டத்தினருக்கு எந்த பயனும் ஏற்படவில்லை' என, குருமிட்கல் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூரு அதிருப்தி தெரிவித்துள்ளார். 'இதே காரணத்தால், இம்முறை கூட்டத்தொடரில் தனக்கு எந்த படியும் தேவையில்லை' என, நிராகரித்துள்ளார். இதுகுறித்து, சபாநாயகர் காதருக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு முறை பெலகாவி சுவர்ண விதான்சவுதாவில், குளிர்கால கூட்டத்தொடர் நடத்த, 25 முதல் 30 கோடி ரூபாய் வரை, அரசு செலவிடுகிறது. ஆனால் இங்கு நடக்கும் விவாதங்களால் எந்த பயனும் இல்லை. கடந்த முறை விவாதிக்கப்பட்ட விஷயங்களின் முன்னேற்றம் குறித்து, இதுவரை அரசு அறிக்கை வெளியிடவில்லை. கூட்டத்தொடர் என்றால் விவாதிப்பது, கை தட்டுவதுடன் நின்று போகிறது. சுற்றுலா சென்று வருவது போன்றுள்ளது. மக்களின் பிரச்னைகளை பற்றி விவாதித்து, தீர்வு காண்பதை விட, அரசியல் சார்ந்த விஷயங்களே, அதிகம் பேசப்படுகின்றன. மழை, வெள்ளப்பெருக்கால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் மேற்கொள்ள, அரசு இன்னும் நிதி வழங்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் எம்.எல்.ஏ.,க்கள் படித்தொகை பெறுவது சரியில்லை. எனவே இம்முறை பெலகாவி கூட்டத்தொடரில், உணவு, சிற்றுண்டி, காபி, தங்கும் படியை நான் பெறமாட்டேன். அனைத்தையும் என் சொந்த செலவில் செய்து கொள்கிறேன். கூட்டத்தொடரின் செலவை குறைக்க வேண்டும். மக்கள் தொடர்புடைய விஷயங்களுக்கு, அதிகமான நேரம் ஒதுக்க வேண்டிய அவசியத்தை, அரசு புரிந்து கொள்ள வேண்டும். பெலகாவி கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட, பல்வேறு வாக்குறுதிகள் இன்னும் காகிதத்திலேயே உள்ளன. வட மாவட்டங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தத்தளிக்கின்றன. இம்முறையும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அரசு அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை