உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மன்னர்களுக்கு செருப்பு தயாரித்த கிராமம்

மன்னர்களுக்கு செருப்பு தயாரித்த கிராமம்

அத்தகைய செருப்புகளை ஒரு கிராமமே தயாரித்து கொடுத்துள்ளது. அந்த கிராமம், கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ளது.பெலகாவி மாவட்டத்தின் அதானி தாலுகாவில் மடபாவி என்ற கிராமத்தில் 50 குடும்பத்தினர் உள்ளனர். இவர்களின் பிரதான தொழில், மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய செருப்பு தயாரிப்பது தான்.தற்போதைய நவீன காலத்தில் செருப்புகள், இயந்திரத்தின் மூலம் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் இன்னமும் மடபாவி கிராம மக்கள், செருப்பை கைகளால் தான் உருவாக்குகின்றனர். இயந்திரங்களை பயன்படுத்துவதே இல்லை.இங்கு தயாரிக்கப்படும் செருப்புகள், மஹாராஷ்டிராவின் கோலாப்பூர் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.செருப்பு தயாரிக்கும் கிராம மக்கள் கூறியது:நாங்கள் தயாரிக்கும் மன்னர்கள் காலத்து செருப்புக்கு 800 ஆண்டு வரலாறு உள்ளது. தமிழகத்தின் ராணிப்பேட்டை, ஆம்பூரில் இருந்து ஆடு, மாடு தோல்களை மொத்தமாக வாங்கி வந்து, செருப்புகளை தயாரிக்கிறோம். ஒரு மாதத்திற்கு 800 ஜோடி செருப்புகளை தயாரித்து, கோலாப்பூருக்கு அனுப்பி வைக்கிறோம்.உயர்தர தோல்களில் செருப்புகளை தயாரிப்பதால், அதை அணிபவர்கள் உடலில் உள்ள சூடு குறையும். கோலாப்பூரில் 150 கடைகளில் நாங்கள் தயாரிக்கும் செருப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு உள்ள மஹாலட்சுமி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள், மன்னர்கள் காலத்து செருப்புகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.ஆனால் எங்களிடம் இருந்து குறைந்த விலைக்கு செருப்புகளை வாங்கிச் சென்று, கோலாப்பூர் கடைக்காரர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். நாங்கள் தயாரிக்கும் செருப்புகளை கோலாப்பூரில் தயாரித்தது என்று கூறி விற்கின்றனர். எங்களுக்கு பக்கத்தில் கோலாப்பூர் தான் உள்ளது. இதனால் தான் அங்கு செருப்புகளை விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்.எங்கள் நிலைமையை புரிந்து, நாங்கள் தயாரிக்கும் செருப்புகளுக்கு பெலகாவி அல்லது அதானி செருப்புகள் என்ற பெயரை வாங்கித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் நாங்கள் தயாரிக்கும் செருப்புகளை விற்பனை செய்ய, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி கடை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இவ்வாறு மக்கள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி