உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தாமதமாவதில் அர்த்தம் இல்லை

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தாமதமாவதில் அர்த்தம் இல்லை

மைசூரு: ''பெங்களூரு மாநகராட்சி தேர்தலை இனியும் தாமதப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெருநகர பெங்களூரு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது எத்தனை வார்டுகள் உள்ளனவோ, அவற்றுக்கு மட்டும் தேர்தல் நடத்துவோம். விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவேன். வார்டுகள் பிரிப்பது பற்றி ஆலோசிக்கப்படும்.தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை, நான்கு மாதங்களில் செய்வோம். தேர்தலை இனியும் தாமதப்படுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.பெருநகர பெங்களூரு ஆணையத்திற்கு சட்டசபையில் ஆதரவு தெரிவித்துவிட்டு, இப்போது எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவரும் பெங்களூரில் முக்கிய தலைவர்களில் ஒருவர். அவரை சந்தித்து மீண்டும் ஆலோசனை பெற தயார்.ராம்நகர் மாவட்டத்தின் பெயர், 'பெங்களூரு தெற்கு' என்று கண்டிப்பாக மாற்றப்படும். இதற்கான வேலைகள் நடக்கின்றன. கட்சி, தனிநபர்களை விட நாடு பெரியது. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்கள் ஆதரவு உண்டு. வெளிநாட்டினர், நம் நாட்டின் விஷயம், சுய மரியாதையில் தலையிடுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை