உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வடலுாரில் புனித தலம் பகுதிகள் திருவள்ளுவர் சங்கம் கோரிக்கை

வடலுாரில் புனித தலம் பகுதிகள் திருவள்ளுவர் சங்கம் கோரிக்கை

பெங்களூரு : ''வடலுார் சத்திய ஞான சபை, தரும சாலை, ஞான தீபம் பகுதிகளை புனித தலமாக தமிழக அரசும், மத்திய அரசும் அங்கீகரிக்க வேண்டும்,'' என, பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் வள்ளலார் விழா, ஸ்ரீராமபுரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. தஞ்சை 'வீணை' வேதையன், ஓசூர் 'வீணை' குமரவள்ளி ஆகியோர் வீணை இசையில் அருட்பா வழங்கினர்.விழாவுக்கு தலைமை வகித்து, பெங்களூரு திருவள்ளுவர் சங்க தலைவர் எஸ்.டி.குமார் பேசியதாவது:எம்மதமும் சம்மதம் எனும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை 1865ல் வள்ளலார் தோற்றுவித்தார். பாவ பட்டியலில் எந்த மதமும் தாய்மொழி பற்றி சொல்லவில்லை. புத்த மதத்தில் பாவ செயல்களையும், அதற்கான மன்னிப்பையும் முன்வைக்காமல் ஒருவர் செய்யும் செயலே நன்மையும், தீமையும் விளைவிப்பதாகும் என்கிறது.ஹிந்து மதத்தில் பாவ கோட்பாடாக, கர்மா, அதர்மம் போன்றவை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத கோட்பாடுகள் எழுதிய தத்துவ ஞானிகள், அவரவர் தாய்மொழியை உள்வாங்கித் தான் எழுதுகின்றனர். ஆனால் வள்ளலார் மட்டுமே, தந்தை - தாய் மொழியை தள்ளிவைப்பது பாவம் என்று கூறியுள்ளார்.வடலுாரில் உள்ள சத்திய ஞான சபை பகுதி, சத்திய தரும சாலை பகுதி, சத்திய ஞான தீபம் பகுதிகளை புனித தலமாக தமிழக அரசும், மத்திய அரசும் அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக இரு அரசுகளுக்கும் வேண்டுகோள் கடிதம் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை