மேலும் செய்திகள்
150 சவரன் நகைகள் திருடிய நகைக்கடை ஊழியர்கள் கைது
30-Sep-2025
விஜயபுரா: நீதிபதி வீட்டில் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹால் நகரில் ஹட்கோ காலணியில், 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சச்சின் கவுசிக்வசித்து வந்தார். இவரது வீட்டில் கடந்த 24ம் தேதி மர்ம நபர்கள், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, லட்சக்கணக்கில் மதிப்புள்ள தங்க நகைகள், பணம் திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., லட்சுமணன் நிம்பர்கி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வந்தது. நீதிபதி வீட்டில் திருடிய பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகாவை சேர்ந்த சுனில், 28, சேத்தன் லமானி, 28, ராகுல் லமானி, 23, ஆகிய மூன்றுபேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 250 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி நகைகள், குற்றம் செய்ய பயன்படுத்திய 2 கார், 2 பைக், 4 மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட எஸ்.பி., லட்சுமணன் நிம்பர்கி தெரிவித்தார்.
30-Sep-2025