உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தனியார் பஸ் மோதி மூன்று பக்தர்கள் பலி

தனியார் பஸ் மோதி மூன்று பக்தர்கள் பலி

கொப்பால் : ஹுலிகெம்மா கோவிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மூவர், பஸ் மோதி உயிரிழந்தனர். கதக் மாவட்டம், ரோணா தாலுகாவின் தள்ளிஹாளா கிராமத்தை சேர்ந்த சிலர், கொப்பால் நகரின் ஹுலிகி கிராமத்தில் உள்ள, வரலாற்று பிரசித்தி பெற்ற, ஹுலிகெம்மா கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். கொப்பாலின், கூகனபள்ளி கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த தனியார் பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் அன்னபூர்ணா, 40, பிரகாஷ், 25, சரணப்பா, 19, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நால்வர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த முனிராபாத் போலீசார், சடலங்களை மீட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு கொப்பால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். விபத்தால் நெடுஞ்சாலையில் நீண்ட நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி