உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ் மீது லாரி மோதியதில் ஓட்டுநர், மூவர் உயிரிழப்பு

பஸ் மீது லாரி மோதியதில் ஓட்டுநர், மூவர் உயிரிழப்பு

மைசூரு: தனியார் ஏ.சி., ஸ்லீப்பர் பஸ்சும், டிம்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில், பஸ் ஓட்டுநர் உட்பட, நால்வர் உயிரிழந்தனர். பெங்களூரில் இருந்து, கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, ‘காவேரி டிராவல்ஸ்’ என்ற தனியார் ஆம்னி ‘ஏசி’ ஸ்லீப்பர் பஸ் சென்று கொண்டிருந்தது. மைசூரு மாவட்டம், பிரியாபட்டணா தாலுகாவின், பெங்களூரு – மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, எதிரே மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. ஓட்டுநர் சுனில், 28, அப்தாப், 23, சிபில் ஆதம், 32, நடத்துநர் சஜேஷ், 30, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, பிரியாபட்டணா அரசு மருத்துவமனை, ஹூன்சூரு, மைசூரின் கே.ஆர்., மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் ஓட்டுநர் சுனில், மைசூரை சேர்ந்தவர். மற்ற மூவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். தகவலறிந்து அங்கு வந்த பிரியாபட்டணா போலீசார், விசாரணையை துவக்கியுள்ளனர். கன மழை காரணமாக, சம்பவம் நடந்த இடத்தில் மரம் முறிந்து விழுந்திருந்தது. இதன் மீது மோதுவதை தவிர்க்கும் நோக்கில், லாரி ஓட்டுநர் திடீரென வாகனத்தை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த பஸ் மீது மோதி இருக்கலாம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை