சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு
கலபுரகி: கலபுரகி நகரின், மில்லத் நகரில் வசித்தவர் ஆயிஷா, 70. இவரது உறவினர் வீட்டு குழந்தைக்கு, மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள ஹைத்ரா தர்காவில், முடியிறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆயிஷா குடும்பத்தினர், நேற்று காலை காரில் புறப்பட்டனர்.கலபுரகி மாவட்டம், அப்சல்புரா தாலுகாவின், கொப்பூரா கே கிராமத்தின் அருகில் வரும் போது, தெரு நாய் திடீரென குறுக்கே வந்தது. நாய் மீது மோதுவதை ஓட்டுநர் தவிர்க்க முற்பட்ட போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. பலத்த காயமடைந்த ஆயிஷா, 70, அஜ்மீரா, 30, ஜெய்னப், 2, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தேவல கானகாபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.