உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆட்டோ மீது அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலி

ஆட்டோ மீது அரசு பஸ் மோதல் ஒரே குடும்பத்தின் 3 பேர் பலி

நெலமங்களா: ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே நேற்று மதியம் 2:00 மணிக்கு மல்லரபானவாடி என்ற கிராமத்தில் கர்நாடக அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. சாலையின் குறுக்கே, திடீரென ஒரு ஆட்டோ வந்தது.அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்த முயன்றார். அதற்குள் ஆட்டோ மீது பஸ் மோதியது. இதில் ஆட்டோ உருக்குலைந்தது.விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நெலமங்களா போக்குவரத்து போலீசார் அங்கு சென்று, ஆட்டோவில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஒரு சிறுமி, ஒரு பெண், ஒரு ஆண் இறந்தது கிடந்தனர்.விசாரணையில் உயிரிழந்தவர்கள் நெலமங்களா டவுனை சேர்ந்த புட்டம்மா, 55, இவரது மகள் வர்ஷினி, 13, ஆட்டோ டிரைவர் சீனிவாஸ், 40, என்பது தெரிய வந்தது.படுகாயம் அடைந்த புட்டம்மாவின் இன்னொரு மகள் லெகானா, 11, உறவினர்கள் நாகரத்னம்மா, 35, வெங்கடேஷ், 37, ஆகிய மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்று உடல்களும் மீட்கப்பட்டன.சாந்தி நகரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது தெரியவந்தது.பஸ்சில் இருந்த 20 பயணியருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி