தெரு நாயை கொன்று வீடியோ எடுத்த மூவர் கைது
வர்த்துார்: தெரு நாயை கொன்று வீடியோ எடுத்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு வர்த்துாரில் வசிப்பவர்கள் புனித், முரளி, முனியப்பா. இவர்கள் 3 பேரும், சில தினங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்றை பிடித்து சென்று, மரத்தில் கட்டி தொங்க விட்டனர். கற்களை வீசியும், மரக்கட்டைகளால் அடித்தும் கொன்றனர். இதை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் வெளியிட்டனர். வீடியோ வேகமாக பரவிய நிலையில், தெருநாய்கள் பாதுகாப்பு பிரியரான நிஷ்சிந்தா நாராயண் என்பவர், மூன்று பேர் மீதும் வர்த்துார் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் நேற்று கைது செய்தனர். தெருநாயை ஏன் கொன்றனர் என விசாரணை நடக்கிறது.