உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மைசூரு பெமல் தொழிற்சாலையில் நடமாடும் புலியால் பரபரப்பு

 மைசூரு பெமல் தொழிற்சாலையில் நடமாடும் புலியால் பரபரப்பு

பெங்களூரு: மைசூரு பெமல் தொழிற்சாலை வளாகத்திற்குள் ஒரு புலி சர்வசாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மைசூரு மாவட்டத்தில் புலிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து உள்ளது. அக்., 16 முதல் புலி நடத்திய தாக்குதலில் மூன்று விவசாயிகள் உயிரிழந்தனர்; ஒருவர் கண் பார்வையை பறி கொடுத்தார். புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதன் விளைவாக, எட்டு குட்டிகள் உட்பட 15 புலிகளை பிடித்தனர். எட்டு குட்டிகள் பன்னரகட்டாவுக்கும், மற்றவை அடர்ந்த வனப்பகுதியிலும் விடப்பட்டன. இதனால் மைசூரின் வனப்பகுதி அருகில் வசித்து வந்த கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், வனப்பகுதி, கிராமங்களில் காணப்பட்ட புலிகள், தற்போது நகர் பகுதிகளிலும் தென்பட துவங்கி உள்ளன. மைசூரு புறநகரில் உள்ள கூர்கள்ளி அருகில் உள்ள பெமல் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 28ல், பாதுகாப்பு ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையின் இயந்திர பிரிவு சாலையில், ஒரு புலி நடந்து சென்று புதருக்குள் ஒளிந்து கொண்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதை வீடியோவாக பதிவு செய்து நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். அவர்களும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வனத்துறை அதிகாரிகள் பரமேஷ், ரவீந்திரன், சந்தோஷ் ஆகியோர் ஆய்வு செய்தபோது, எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி