மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (22.07.2026) பெங்களூரு
22-Jul-2026
ஆன்மிகம் மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. சஹஸ்ரநாம அர்ச்சனை ஆடி திருவிழாவை முன்னிட்டு, சஹஸ்ரநாம அர்ச்சனை, மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம் - மாலை 6:30 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கன்னா தெரு, சிவாஜிநகர். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133.
22-Jul-2026