மேலும் செய்திகள்
இன்று இனிதாக
01-Aug-2026
ஆன்மிகம் மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. இந்திய கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையரகம் மற்றும் ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட் இணைந்து நடத்தும் காந்தி ஷில்ப் பஜார் சார்பில் கைவினை, கைத்தறி பொருட்கள் கண்காட்சி, விற்பனை - காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு ஹர்பன் ஹட், வட்ட சாலை, ஹெப்பால் தொழில் பகுதி, மைசூரு.
01-Aug-2026