உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இன்று இனிதாக...(12.08.2026) பெங்களூரு

 இன்று இனிதாக...(12.08.2026) பெங்களூரு

ஆன்மிகம் பிரம்ம ரத உத்சவம்  ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரத உத்சவத்தை ஒட்டி, நவ சண்டிகா பாராயணம், நவ சண்டிகா ஹோமம், சுவாசினி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை, தம்பதி பூஜை, பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு. தொடர்புக்கு: 99809 05225. ஆடி திருவிழா  ஆடி திருவிழாவை ஒட்டி, நகரின் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோவில் நடை திறப்பு - அதிகாலை 4:00 மணி: தஞ்சாவூர் கரகம் மஹோத்சவம் வீதியுலா வருதல், கரகம் எடுப்பவர் பி.வேலாயுதம், - காலை 10:30 மணி; திருவாரூர் மாவட்ட கலைஞர்கள் நடனம் - மாலை 6:00 முதல் 9.00 மணி வரை; அம்மனுக்கு எஸ்.யோகலிங்கம் சிறப்பு பூஜைகள், மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர். தொடர்புக்கு: 83106 89632.  சிறப்பு அபிஷேகம் - காலை 8:30 மணி; அமாவாசை பூஜை, திருவிழா பூஜைகள், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - முற்பகல் 11:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122 ஆடி அமாவாசை  ஆடி அமாவாசையை ஒட்டி, நகரின் பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடக்கின்றன. சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; மலர் அலங்காரம் - 7:00 மணி; மஹா மங்களாரத்தி - 8:00 மணி; உற்சவர் ஊஞ்சல் சேவை, பம்பை உடுக்கையுடன் பக்தி பாடல்கள் - மதியம் 12:00 மணி; மஹா மங்களாரத்தி - 1:00 மணி; அன்னதானம் - 1:30 மணி; பம்பை உடுக்கையுடன் அங்காள அம்மன் தாலாட்டு -மதியம் 2:30 மணி; சக்தி கரகம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555  சுப பிரம்மச்சாரி ஹோமம், நாக தோஷ நிவாரண ஹோமம், கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், சுப்ரமண்ய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம் - காலை 9:00 மணி. இடம்: ஓம் ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், மல்லேஸ்வரம்.  அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் - காலை 5:00 மணி; கலசம், விளக்கு, வேள்வி பூஜை, அமாவாசை ஹோமம், பக்தர்களுக்கு பிரசாதம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிபராசக்தி சக்தி பீட கோவில், ஜீவன் பீமா நகர். தொடர்புக்கு: 88926 83899  ஓம் சக்தி அம்மன், பிரத்யங்கிரா தேவி, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் - காலை 7:00 மணி; கணபதி, நவக்கிரஹ ஹோமம் - காலை 10.00 மணி; மஹாமங்களாரத்தி, அன்னதானம் - மதியம் 1:00 மணி. தொடர்புக்கு: 94480 09087.  அபிஷேகம் - 7:00 மணி; மஹா மங்களரத்தி - 9:00 மணி; காளி பூஜை - மதியம் 12:00 மணி; பிரத்யங்கிரா ஹோமம் - மாலை 6:30 மணி; அபிஷேகம் - இரவு 9:00 மணி; அலங்காரம் - நள்ளிரவு 12:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி சாலை. தொடர்புக்கு: 93437 37609  வேம்பு அம்மன், வராஹி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை; பக்தர்களுக்கு தாயத்து கட்டுதல், திருஷ்டி கழித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வராஹி அம்மன் தேவி கோவில், 6 வது கிராஸ், கே.பி.அக்ரஹாரா, பெங்களூரு. தொடர்புக்கு: 98452 25923  சிறப்பு பூஜை, புஷ்ப அலங்காரம்; தீபாராதனை, அன்ன பிரசாத வினியோகம், பக்திசை கச்சேரி -- காலை 9:00 மணி முதல். இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஹென்றீஸ் லைன், கோரமண்டல், தங்கவயல்.  சிறப்பு பூஜை, குங்கும, சந்தன அலங்காரம், தீபாராதனை, தீர்த்த பிரசாத வினியோகம் -- காலை 10:00 மணி. இடம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரண்ட ஹள்ளி, ராபர்ட்சன்பேட்டை.  சிறப்பு பூஜை. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை, பிரசாத வினியோகம் - மாலை 6:00 மணி. இடம்: ஆதிசக்தி மாரியம்மன் கோவில், ராபர்ட்சன்பேட்டை, 4 வது பிளாக். மண்டல பூஜை  ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி  சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. மலர் கண்காட்சி  சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !