உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயலில் இன்று தங்கத் தாய் தேர் திருவிழா

தங்கவயலில் இன்று தங்கத் தாய் தேர் திருவிழா

தங்கவயல்: உரிகம் பகுதியில் உள்ள அற்புத தங்கத் தாய் திருத்தல 50ம் ஆண்டு பொன்விழா இன்று நடக்கிறது. தங்கவயல் தங்கத்தாய் திருத்தலத்தின் பொன் விழா, இம்மாதம் 5ம் தேதி, தங்கத்தாய் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பொன்விழாவை முன்னிட்டு இன்று காலை 6:00, 7:00, 8:30, 10:00, 12:00, மதியம் 2:00 மணிக்கு திருவிழா திருப்பலி; மாலை 4:00 மணிக்கு கூட்டு திருப்பலி, திவ்ய நற்கருணையுடன் தங்கத் தாய் தேர் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜெயகரன் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை