மேலும் செய்திகள்
நந்தினி பாலகத்தில் தீ உரிமையாளர் மரணம்
01-Jul-2026
சிக்கபல்லாபூர்: கல்குவாரியின், 30 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார். ஆந்திரா மாநிலம் தர்மாவரத்தை சேர்ந்தவர் நாகேந்திரா, 35. இவர், கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் யலகலஹள்ளி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் தொழிலாளியாக வேலை செய்தார். நேற்று முன்தினம் மாலை, கல்குவாரி பாறைகளை உடைக்க, கம்ப்ரசர் டிராக்டரில் அமர்ந்தபடி இயக்கினார். அப்போது, 30 அடி ஆழ பள்ளத்தில் டிராக்டர் விழுந்தது. தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நாகேந்திராவை, சக தொழிலாளர்கள் மீட்டு, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார். நாகேந்திரா வேலை செய்த கல்குவாரி, சட்டவிரோதமாக இயங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரேசந்திரா போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Jul-2026