உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தாசனபுராவுக்கு மாற வியாபாரிகள் எதிர்ப்பு

தாசனபுராவுக்கு மாற வியாபாரிகள் எதிர்ப்பு

பெங்களூரு: யஷ்வந்த்பூர் விவசாய உற்பத்தி மார்க்கெட்டில் இருந்து வெங்காயம், பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு விற்பனையை, தாசனபுரா மார்க்கெட்டுக்கு மாற்றுவதற்கு, வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.பெங்களூரின் யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளை பொருட்கள் விற்பனை மையத்துக்கு, தினமும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள், பொது மக்கள் வருகின்றனர்.இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில், யஷ்வந்த்பூர் மார்க்கெட்டில் இருந்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு வியாபாரத்தை, நெலமங்களா அருகில் உள்ள தாசனபுராவில், 67 ஏக்கரில் துணை மார்க்கெட்டுக்கு மாற்ற, ஏ.பி.எம்.சி., நிர்வாகம் முடிவு செய்தது.கொரோனா வேளையில் 150க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தாசனபுராவுக்கு இடம் மாறிச் சென்றனர். மற்ற வியாபாரிகள் செல்ல மறுத்து, யஷ்வந்த்பூர் மார்க்கெட்டிலேயே வியாபாரம் செய்கின்றனர்.தாசனபுரா தொலைவில் இருப்பதால், வாடிக்கையாளர்களை இழக்க வேண்டி வரும் என, அவர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து, வெங்காயம், உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்க செயலர் ரவிசங்கர் கூறியதாவது:தாசனபுரா மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லை. அங்குள்ள கடைகள் மிகவும் சிறியவை. யஷ்வந்த்பூர் மார்க்கெட்டில் உள்ள கடைகள், எந்த அளவு உள்ளதோ, அதே அளவு கடைகள் தாசனபுராவிலும் ஒதுக்க வேண்டும்.இதுகுறித்து, நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டோம். நீதிமன்றமும் இதையே கூறியுள்ளது. கொரோனா வேளையில் தாசனபுராவுக்கு இடம் மாற்றப்பட்ட வர்த்தகர்களின் 55 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்துள்ளது.இந்த ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு பதிலாக, கடைகளை பறித்துக் கொண்டு, மீண்டும் தருவதாக ஏ.பி.எம்.சி., அதிகாரிகள் கூறுகின்றனர். இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.மாநிலத்தின் எந்த மார்க்கெட்டிலும், இது போன்று நடந்ததாக உதாரணம் இல்லை. இதுகுறித்து, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வர்த்தகர்களை இடம் மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.யஷ்வந்த்பூர் ஏ.பி.எம்.சி.,க்கு சொந்தமான இடத்தை, வேறு நோக்கத்துக்கு பயன்படுத்துவதற்காக, வியாபாரிகளை இடம் மாற்ற முயற்சிப்பதாக சந்தேகிக்கிறோம். தாசனபுரா மார்க்கெட்டுக்கு செல்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.- தீபக் ஷா,செயலர்,பூண்டு வியாபாரிகள் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி