மேலும் செய்திகள்
மெட்ரோ மஞ்சள் பாதையில் ஜூலை 16, 17ல் இறுதி ஆய்வு
30-Jun-2025
பெங்களூரு: ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரையிலான, மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.பெங்களூரில் உள்ள தெற்கு பகுதிகளை மெட்ரோ ரயில் வழியாக அடைய, மஞ்சள் நிற வழித்தடம் அமைக்கப்பட்டது.ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரை 16 மெட்ரோ நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 18.88 கி.மீ., நீளத்திற்கு வழித்தடம் அமைக்கப்பட்டது.'இந்த வழித்தடத்துக்கு பத்து நாட்களுக்குள் ஐ.எஸ்.ஏ., எனும் சுயாதீன பாதுகாப்பு மதிப்பீட்டு சான்றிதழ் பெறப்படும். இதையடுத்து கமிஷனர் ஆய்வு நடத்தி, அனுமதி வழங்கியதும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ரயில்கள் இயக்கப்படும்' என, பெங்களூரு மெட்ரோ நிர்வாக இயக்குநர் மஹேஸ்வர ராவ் கடந்த 5ம் தேதி கூறியிருந்தார்.அவர் கூறி, பத்து நாட்களுக்கு மேலாகியும், இன்னும் மஞ்சள் நிற பாதைக்கு ஐ.எஸ்.ஏ., சான்றிதழே வழங்கப்படவில்லை.இதனால், மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் வந்து ஆய்வு நடத்துவதும் தாமதமாகி உள்ளது. கமிஷனர் ஆய்வு மேற்கொண்டு, அனுமதி அளித்தால் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்.தற்போது, சான்றிதழ், கமிஷனர் ஆய்வு இரண்டும் தாமதமாகி உள்ளதால், அறிவித்தது போன்று ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மஞ்சள் நிற வழித்தடத்தில் ரயில்களை இயக்குவது தாமதமாகும் என தெரிகிறது.இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்வந்த் சவான் கூறுகையில், “ஐ.எஸ்.ஏ., சான்றிதழ் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. அறிவிப்பு வந்தால் நிச்சயம் தெரிவிக்கப்படும்,” என்றார்.
30-Jun-2025