புயலால் நிறுத்தப்பட்ட ரயில்கள் இன்று முதல் மீண்டும் இயக்கம்
பெங்களூரு: 'மோந்தா புயலால் ரத்து செய்யப்பட்டிருந்த, பெங்களூரில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் இன்று முதல் இயங்க துவங்கும்' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று 'மோந்தா' புயலாக உருமாறி உள்ளது. இதனால் பெங்களூரில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மீண்டும் அவை இயங்க துவங்கி உள்ளன. தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: எண் 12836: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை 8:50 மணிக்கு ஜார்க்கண்டின் ஹாடியா அதிவிரைவு ரயில் புறப்படும் எண் 12503: எஸ்.எம்.வி.டி., பெங்க ளூரு ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை 10:15 மணிக்கு திரிபுராவின் அகர்தாலா விரைவு ரயில் புறப்படும். எண் 128 64: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை 10:35 மணிக்கு ஹவுரா சந்திப்பு அதிவிரைவு ரயில் புறப்படும். எண் 12246: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை 11:45 மணிக்கு ஹவுரா சந்திப்பு டுரான்டோ விரைவு ரயில் புறப்படும். எண் 13433: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, இன்று மதியம் 1:50 மணிக்கு மேற்கு வங்கத்தின் மால்டியா டவுன் அம்ரித் பாரத் விரைவு ரயில் புறப்படும். எண்: 18464: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - புவனேஸ்வர் பிரசாந்தி விரைவு ரயில், நாளை (29ம் தேதி) ரத்து செய்யப்பட்டு உள்ளது. எண் 06269: மைசூரு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு தினசரி பயணியர் சிறப்பு ரயில், அக்., 28, 29, 30, 31, நவ., 3ம் தேதிகளில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், பானஸ்வாடியில் நிற்கும்; பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 12658: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் தினசரி அதிவிரைவு ரயில், அக்., 30 ம் தேதி, கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், லொட்டேகொள்ளஹள்ளி, பானஸ்வாடி, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, பையப்பனஹள்ளி வழியாக சென்னை செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 06270: எஸ்.எம்.டி.வி., பெங்களூரு - மைசூரு தினசரி பயணியர் சிறப்பு ரயில், அக்., 30 ம் தேதி பானஸ்வாடி, யஷ்வந்த்பூர் வழியாக கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 16022: அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் காவேரி தினசரி பயணியர் விரைவு ரயில், அக்., 30 ம் தேதி கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், லொட்டேகொள்ளஹள்ளி, பானஸ்வாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.,புரம் வழியாக சென்னை செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 06243: மைசூரு -- காரைக்குடி வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கும் சிறப்பு ரயில், அக்., 30 ம் தேதி மைசூரில் இருந்து புறப்பட்டு, கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், பானஸ்வாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.,புரம் வழியாக காரைக்குடிக்கு செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண் 22135: மைசூரு - ரேணுகுன்டா வாராந்திர அதிவிரைவு ரயில், அக்., 31ம் தேதி மைசூரில் இருந்து புறப்பட்டு கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், பானஸ்வாடி, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, பையப்பனஹள்ளி, கே.ஆர்.,புரம், ஜோலார்பேட் வழியாக செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது. எண்: 16521: பங்கார்பேட்டை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு தினசரி விரைவு ரயில், வரும் 30ம் தேதி பையப்பனஹள்ளியுடன் நிறுத்தப்படும். எண் 07339: எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி - கே.எஸ்.ஆர்., பெங்களூரு தினசரி சிறப்பு ரயில், வரும் 29 ம் தேதி யஷ்வந்த்பூருடன் நிறுத்தப்படும். எண் 07340: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி தினசரி சிறப்பு ரயில், வரும் 30 ம் தேதி யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும். எண் 56520: ஹொஸ்பேட் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு தினசரி பயணியர் ரயில், வரும் 30 ம் தேதி யஷ்வந்த்பூருடன் நிறுத்தப்படும். எண் 17391: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சிந்தனுார் தினசரி விரைவு ரயில், வரும் 31ம் தேதி யஷ்வந்த்பூரில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.