உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போக்குவரத்து ஊழியர்கள் ஏப்., 15ல் போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் ஏப்., 15ல் போராட்டம்

பெங்களூரு: தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், ஏப்ரல் 15ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் நிர்ணயிப்பது, மேலதிகாரிகளின் தொந்தரவை கட்டுப்படுத்துவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., உள்ளிட்ட நான்கு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.கடந்தாண்டு டிசம்பர் 31 முதல், காலவரையற்ற போராட்டம் நடத்தப் போவதாக, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவித்திருந்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அப்போது முதல்வர் சித்தராமையா உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர்.இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஊழியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளன.'ஏப்ரல் 15ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், அன்றைய தினம் காலை 11:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை முதல்வர் சித்தராமையாவின் வீட்டு முன் தர்ணா நடத்தப்படும்' என, அவர்கள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ