உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நடிகர் கார் கண்ணாடியை உடைத்து திருடிய ராம்ஜி கும்பலின் திருச்சி நபர் கைது

நடிகர் கார் கண்ணாடியை உடைத்து திருடிய ராம்ஜி கும்பலின் திருச்சி நபர் கைது

விஜயநகர்: நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து திருடிய, ராம்ஜி கும்பலை சேர்ந்த திருச்சி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைப்பட தயாரிப்பாளரான ரவி கவுடா நடித்துள்ள படம், 'ஐ ஆம் காட்'. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகள், புகைப்படங்கள், வீடியோக்களை ஒரு 'ஹார்ட் டிஸ்க்'கில், ரவி கவுடா பதிவு செய்து வைத்திருந்தார். கடந்த மாதம் 4ம் தேதி இரவு 10:30 மணிக்கு, விஜயநகர் கபே காபி டே அருகே காரை நிறுத்திவிட்டு, ரவி கவுடா காபி குடிக்க சென்றார். இந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர், கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த கையடக்க கணினி, ஹார்ட் டிஸ்க்கை திருடிச் சென்றார். விஜயநகர் போலீசில் ரவி கவுடா புகார் செய்தார். போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கார் கண்ணாடி உடைத்து திருடும் நபர், அதை ஒரு பேக்கில் வைத்து எடுத்துச் சென்ற காட்சிகளும், சிறிது துாரம் நடந்து சென்றதும், அந்த பேக்கை இன்னொருவரிடம் கொடுப்பதும் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் அடிப்படையில், போலீசார் விசாரித்தபோது திருட்டில் ஈடுபட்டது, தமிழகத்தின் ராம்ஜி திருட்டு கும்பலை சேர்ந்தவரும், திருச்சியில் வசிப்பவருமான ஜெயசீலன், 47, அவரது மகன் தீனதயாளன், 21, என்பதும் தெரிந்தது. திருச்சி சென்ற விஜயநகர் போலீசார், ஜெயசீலனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரது மகன் தலைமறைவாகிவிட்டார். கைதான ஜெயசீலனிடம் இருந்து, ரவி கவுடாவிடம் திருடப்பட்ட கையடக்க கணினி, ஹார்ட் டிஸ்க் மீட்கப்பட்டன. ஜெயநகர், சிட்டி ரயில் நிலைய பகுதியிலும் ஜெயசீலனும், தீனதயாளனனும் கைவரிசை காட்டியதும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை