உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விநாயகர், நாகர் சிலை சேதம் இருவர் கைது; ஒருவர் ஓட்டம்

விநாயகர், நாகர் சிலை சேதம் இருவர் கைது; ஒருவர் ஓட்டம்

ஷிவமொக்கா : ஷிவமொக்காவில் விநாயகர் சிலையையும், நாகர் சிலையையும் சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.ஷிவமொக்கா மாவட்டம் ராகிகுட்டாவின் பங்காரப்பா லே - அவுட்டில் உள்ள பூங்கா போன்ற இடத்தில் விநாயகர், நாகர் சிலை வைத்து வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலையில் இங்கு வந்த மூன்று பேர், அங்கிருந்த சிலையை சேதப்படுத்தி துாக்கி வீசினர். அப்பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிட்டு விரட்டவே, அந்நபர் அங்கிருந்து தப்பினர். இது தொடர்பாக ஷிவமொக்கா ரூரல் போலீசில் புகார் அளித்தனர்.தகவல் அறிந்த ஷிவமொக்கா நகர பா.ஜ., - எம்.எல்.ஏ., சன்னபசப்பா அங்கு வந்து, விபரம் கேட்டறிந்தார். இந்நேரத்தில் போலீசாரும் அங்கு வந்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.எஸ்.பி., மிதுன் குமார் கூறுகையில், ''பங்காரப்பா லே - அவுட்டில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், நான்கைந்து மரங்கள் நடப்பட்டு உள்ளன. இங்கு இருந்த இரு விக்ரஹங்களை, யாரோ சேதப்படுத்தியதாக, இப்பகுதியில் இருந்தவர்கள் கூறி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இப்பகுதியை சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.தகவல் அறிந்து நேற்று அங்கு வந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பாவும் ஆய்வு செய்தார். பின், அவர் கூறுகையில், ''இதற்கு முன், இதன் அருகில் உள்ள சாந்திநகர் பகுதியில் கலவரம் நடந்து, ஓய்ந்தது. அமைதியை சீர்குலைக்க பலர் முயற்சிக்கின்றனர். அரசு அமைத்த மூன்று வகுப்புவாத எதிர்ப்பு படையினர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை,'' என்றார்.அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்த போலீசார், சேஷாத்திரிபுரத்தை சேர்ந்த சையது அகமது 32, பாபுஜிநகரை சேர்ந்த ரஹ்மது, 50, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி