விஷம் வைத்து புலி கொலை: இருவர் கைது
சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் ஹனுார் தாலுகா பச்சேடோடி கிராம பகுதியில் கடந்த 2ம் தேதி, 12 வயதுள்ள பெண் புலி இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், புலியை விஷம் வைத்து கொன்றது தெரிய வந்தது. இந்த செயலை செய்த பச்சேடோடி கிராமத்தை சேர்ந்த பச்சேத்மல்லு, மஞ்சுநாத் ஆகிய இருவரை ஹனுார் மண்டல வன அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.