மேலும் செய்திகள்
கதவை மூடிய பஸ் ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது
26-Jun-2025
விஜயபுரா: முன் பணம் பெற்றுக் கொண்டு ஓட்டுநர் பணிக்கு வராமலும், பணத்தையும் திருப்பித் தராத நபரை, கட்டி வைத்து தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.விஜயபுரா மாவட்டம், சடசனா தாலுகாவின் கோடிஹாளா கிராமத்தை சேர்ந்தவர் பாஷா சாப் அலாவுதீன் முல்லா, 39. இவர் ஓட்டுநர் பணிக்கு வருவதாகக் கூறி, குமார் பிராதர் என்பவரிடம் 20,000 ரூபாய் முன்பணம் பெற்றுக் கொண்டார்.பணிக்கு வரும்படி அழைத்தும் வரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதனால் கோபமடைந்த குமார் பிராதர், ஸ்ரீசைல பீரகொண்டாவுடன் சேர்ந்து, நேற்று முன் தினம் அலாவுதீன் முல்லாவை, சடசனாவில் இருந்து பைக்கில் அமர்த்தி, ஹத்தள்ளி கிராமத்துக்கு அழைத்து வந்தனர்.இங்கு மல்லிகார்ஜுன பிராதர் என்பவரின் கடை முன் இருந்த கம்பத்தில், இரும்பு சங்கிலியால் கட்டிப் போட்டனர். தகாத வார்த்தைகளால் திட்டினர்; தாக்கினர்; கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து, சடசனா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், குமார் பிராதர், ஸ்ரீசைல பீரகொண்டா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
26-Jun-2025