உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., தலைவர் கொலை வழக்கில் இருவர் கைது

பா.ஜ., தலைவர் கொலை வழக்கில் இருவர் கைது

கொப்பால்: கங்காவதியில், மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி தலைவர் கொலை வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொப்பால் மாவட்ட இளைஞர் அணி தலைவர் வெங்கடேஷ் குருபர், 32. கடந்த 8ம் தேதி நள்ளிரவு கங்காவதியின் ராணா பிரதாப் சிங் சதுக்கத்தில், தனது நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் காரில் வந்த ஐந்து பேர், வெங்கடேஷ் குருபர் பயணித்த இரு சக்கர வாகனத்தில் மோதி, அவரை கீழே தள்ளினர். காரில் இருந்து இறங்கிய ஐந்து பேரும், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடேஷின் தந்தை ஹம்பண்ணா அளித்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்த கங்காவதி நகர போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், கொலை செய்த ஐந்து பேர், கம்ப்ளி போலீசில் சரண் அடைந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின், பசவராஜ், கங்காதர் கவுலி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கலபுரகியில் கைது செய்தனர். நேற்று கங்காவதிக்கு அழைத்து வரப்பட்ட இருவரும், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை