18 கிலோ கஞ்சா இருவர் கைது
துமகூரு: கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.துமகூரு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீசார் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் துமகூரு நகரில் உள்ள கார்டன் சாலை பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போது, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த, மைசூரை சேர்ந்த ராகேஷ் மற்றும் மாண்டியாவை சேர்ந்த ஹர்ஷா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 13.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17.89 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.