உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பி.எம்.டி.சி., பஸ் மோதி 2 விபத்தில் இருவர் பலி

 பி.எம்.டி.சி., பஸ் மோதி 2 விபத்தில் இருவர் பலி

பெங்களூரு: பெங்களூரில் ஒரே நாளில் பி.எம்.டி.சி., பஸ் ஏற்படுத்திய இரண்டு விபத்துகளில், இரண்டு பேர் உயிரிழந்தனர். எஸ்.எம்.பி.டி., ரயில் நிலையத்தில் இருந்து சில்க் போர்டு நோக்கி பயணியருடன் பி.எம்.டி.சி., பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் சென்று கொண்டிருந்த டாடா ஏஸ், கார் மீது மோதியது. பின், நடைபாதையின் மீது பஸ் ஏறியது. அங்கு நடைபாதையில் நின்று கொண்டிருந்த மடிவாளா பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த வெங்கடராமப்பா, 65, மீது பஸ் மோதியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பஸ்சின் ஓட்டுநர், நடத்துநர் தப்பிச் சென்றனர். மடிவாளா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.  நாகரபாவியை சேர்ந்தவர் சுசீலா, 70. இவர், நேற்று மதியம் கெங்கேரியில் இருந்து எலஹங்காவுக்கு சென்ற பி.எம்.டி.சி., பஸ்சில் பயணம் செய்தார். விஜயநகர் கோவிந்த்ராஜ நகர் பகுதியில் பஸ்சிலிருந்து இறங்கி, சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ், அவர் மீது மோதியது. அவரது தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்