கோலார் மாவட்டத்தில் இரு சிறுமியர் பலாத்காரம்
தங்கவயல் : கோலார் மாவட்டத்தில் இரு சிறுமியர் பலாத்காரம் செய்யப்பட்டதாக 'போக்சோ' சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இடத்தில் 18 வயது சிறுமி தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமியின் தாய், நேற்று முன்தினம் அளித்த புகாரின் அடிப்படையில், உரிகம் போலீசார், 17 வயது சிறுவன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு 17 வயது இருந்தபோதே, அந்த சிறுவன் பலாத்காரம் செய்து வந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தலைமறைவாக இருக்கும் சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். பங்கார்பேட்டை: 8ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஒரு ஆட்டோ ஓட்டுநர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அன்றிரவு, அந்த சிறுமி, பங்கார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நேற்று ஆட்டோ டிரைவர் மகேஷை, அவரது வீட்டில் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை பங்கார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மகேஷ், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். கோலாரின் நரசாபுராவில் உள்ள டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.