உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜாதி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க உக்ரப்பா எதிர்ப்பு 

 ஜாதி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க உக்ரப்பா எதிர்ப்பு 

கார்வார்: ஜாதி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கு, கர்நாடக காங்கிரஸ் துணை தலைவர் உக்ரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கார்வாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடக அமைச்சரவையில் இன்னும், 20 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடத்தை நிரப்பும் போது திறமையான, நன்கு படித்த, தேச பக்தியுள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஜாதி அடிப்படையில் அமைச்சர் பதவி கொடுக்காதீர்கள். கட்சி ஆட்சிக்கு வரும் போது எல்லாம், பழைய முகங்களுக்கே அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது.ஜாதியை அடிப்படையாக வைத்து அமைச்சர் பதவியை கேட்க யாருக்கும் உரிமை இல்லை. காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், மக்களுக்கான கட்சி. புதியவர்களை அமைச்சராக்கினால்தீவிரமாக பணியாற்றுவர். மூத்த அமைச்சர்களை கட்சி பணிக்கு அனுப்புங்கள். இந்தியர்கள் அல்லாதோர் எந்த காரணத்திற்காகவும் நமது நாட்டிற்குள் அனுமதிக்கப்பட கூடாது. மேற்கு வங்கம், அசாம் வழியாக, வங்கதேசத்தினரை இந்தியாவில் நுழைய விடாமல் பார்த்து கொள்வது மத்திய அரசின் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை