உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அனுமதியின்றி பயன்படுத்திய ஸ்கேனிங் இயந்திரம் பறிமுதல்

 அனுமதியின்றி பயன்படுத்திய ஸ்கேனிங் இயந்திரம் பறிமுதல்

பெங்களூரு: தனியார் மருத்துவமனையில் விதிமீறலாக பயன்படுத்தப்பட்ட ஸ்கேனிங் இயந்திரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெங்களூரு நகர சுகாதார அதிகாரி ரவீந்திர நாத் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகள், ஸ்கேனிங் இயந்திரங்கள் வைத்திருப்பது குறித்து, சுகாதாரத்துறையிடம் தெரிவித்து, முறைப்படி பதிவு செய்து கொள்வது கட்டாயம். இந்த இயந்திரங்களை பயன்படுத்தி, கர்ப்பிணியருக்கு ஸ்கேனிங் செய்யும்போது, வகுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால் பெங்களூரு கிழக்கு தாலுகாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் விதிமீறலாக ஸ்கேனிங் பயன்படுத்துவதும், பதிவு செய்யாததும் தெரிய வந்தது. மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தோம். அனுமதி பெறாமல் பயன்படுத்திய ஸ்கேனிங் இயந்திரத்தை, பறிமுதல் செய்தோம். நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பான ஆவணங்களையும், மருத்துவமனை நிர்வாகம் சரியாக நிர்வகிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்