மேலும் செய்திகள்
மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
18-Jul-2025
ஷிவமொக்கா: மனைவியை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரதுர்கா மாவட்டம், ஹொளல்கெரேயை சேர்ந்தவர் பசவராஜ், 38. பல்லாரி சுரங்க தொழிற்சாலையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மனைவி மஞ்சுளாவுடன் ஏற்பட்ட சண்டையில், அவரை கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுராவில் ஜூன் 11ல் கைது செய்யப்பட்ட அவர், 13ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின், ஷிவமொக்காவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறையில் உள்ள தனது அறையில் ஜன்னல் கம்பியில் போர்வையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வார்டன்கள், இதை பார்த்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் அவரின் உடலை, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறையில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை நடந்து வருகிறது.
18-Jul-2025