உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விஜயேந்திரா எதிரணியினர் டில்லியில் முகாம்

 விஜயேந்திரா எதிரணியினர் டில்லியில் முகாம்

: கர்நாடகா காங்கிரசில் நடக்கும் அதிகார பகிர்வு குறித்து எந்த ஒரு விளக்கமும் தரத்தேவையில்லை. அந்த அளவுக்கு, காங்கிரஸ் ஆட்சியின் நிலை சந்தி சிரிக்கிறது. முதல்வரும், துணை முதல்வரும் மாறி, மாறி டில்லி செல்வதை வாடிக்கையாக வைத்து உள்ளனர். இந்நிலையில், நேற்று பா.ஜ.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களும், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு எதிரான அதிருப்தி குழுவினர் என அறியப்படும் ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான அணியினர் டில்லி சென்றனர். இதில், குமார் பங்காரப்பா, ஸ்ரீமந்த் பாட்டீல், பி.வி.நாயக், பரத் ஷெட்டி, சந்தோஷ் போன்றோர் டில்லிக்கு திடீர் விஜயம் சென்றனர். இவர்கள் டில்லியில் உள்ள கர்நாடகா பவனுக்கு விஜயம் செய்தனர். இங்கு அமர்ந்து கொண்டு சம்பிரதாயத்திற்கு சில புகைப்படங்களை எடுத்து கொண்டு, ரகசிய உரையாடலை நடத்தி முடித்தனர். இவர்கள் பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் பா.ஜ., தலைவர் மாற்றம், காங்கிரஸ் அரசின் நிலை, குளிர்கால கூட்டத்தொடர் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த சந்திப்பு, பெங்களூரில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இருவரும் ஒன்றாக உணவருந்தும் வேளையில் நடந்ததால் அதிக அளவிற்கு பிரபலமாகவில்லை. சத்தம் இல்லாமலே நடந்து விட்டது. இந்த சந்திப்பு சுமுகமாக முடியுமா அல்லது வில்லங்கமாக முடியுமா என சந்திப்பிற்கு பிறகு, ரமேஷ் ஜார்கிஹோளி டீம் கொடுக்கும் பேட்டியின் மூலமே தெரியவரும். இது குறித்து, குமார் பங்காரப்பா கூறுகையில், “கட்சி மேலிட தலைவர்கள் சந்தித்து பேச்சு நடத்த உள்ளோம். பேச்சு முடிந்த பின், எது குறித்து பேசினோம் என பொது வெளியில் அறிவிக்கிறேன். பா.ஜ., மாநில தலைவர் மாற்றம் குறித்து பேசப்போவதில்லை,” என்றார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ