உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வினய் குல்குர்னி ஜாமின் மனு தள்ளுபடி வினய் குல்குர்னி ஜாமின் மனு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

 வினய் குல்குர்னி ஜாமின் மனு தள்ளுபடி வினய் குல்குர்னி ஜாமின் மனு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி ஜாமின் மனுவை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தார்வாட் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கில் 16 வது குற்றவாளியாக உள்ள சந்திரசேகருக்கு சமீபத்தில், நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை காரணம்காட்டி, 15வது குற்றவாளியாக உள்ள வினய் குல்கர்னி, தனக்கு ஜாமின் வழங்க கோரி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் முன் விசாரணை நடந்து வந்தது. சி.பி.ஐ., வக்கீல், 'சாட்சிகளை மிரட்டி அழுத்தம் கொடுத்ததாகவும், ஆதாரங்களை அழிக்க முயற்சித்ததாகவும்' தெரிவித்தார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, நேற்று தீர்ப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தார். இதன்படி நேற்று நீதிமன்றம் கூடியதும், 'வினய் குல்கர்னியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக' நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ