மேலும் செய்திகள்
மின் கம்பங்களில் விளம்பர பதாகை அகற்றம்
30-Mar-2025
பெங்களூரு மாநகராட்சியில், வர்த்தக விளம்பர போர்டுகள் உட்பட அனைத்து விதமான விளம்பர போர்டுகளை கட்டுப்படுத்த வகுக்கப்பட்ட, பெங்களூரு மாநகராட்சி விளம்பர விதிகள் - 2024க்கு, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விதிகள் நடப்பாண்டு அமலுக்கு வரும். மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், வர்த்தக விளம்பர போர்டுகளை வெளியிட, டெண்டர் மூலம் லைசென்ஸ் வழங்கப்படும். விளம்பர கொள்கையை கடுமையாக செயல்படுத்த, தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான நடைமுறை செயல்படுத்தப்படும். இதற்கான பணிகளில் மாநகராட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஈடுபட்டுள்ளது. விதிமீறலான விளம்பர போர்டுகளை கட்டுப்படுத்த, டெண்டரில் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும். விதிமீறலாக விளம்பர போர்டுகள் பொருத்துவோர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும். புதிய விளம்பர கொள்கை செயல்படுத்துவதால், மாநகராட்சிக்கு நடப்பாண்டு 750 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
30-Mar-2025