மேலும் செய்திகள்
50வது ஆண்டு விழா காணும் திருத்தணி அரசு பணிமனை
18-Jan-2025
பெங்களூரு: ஹொஸ்கோட் பணிமனையை விரிவுபடுத்த 1,400 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தில், 'வால்வோ' நிறுவனம் கையெழுத்திட்டு உள்ளது.சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனத்திற்கு, இந்தியாவில் பல இடங்களில் பணிமனைகள் உள்ளன. இந்த நிறுவனம் வால்வோ பஸ், லாரிகளை தயாரிப்பதில் பெயர் பெற்று உள்ளது. பெங்களூரு ஹொஸ்கோட்டில் வால்வோ பணிமனை உள்ளது. இங்கு பஸ், லாரிகள் தயாரிக்கப்படுகின்றன.இந்நிலையில் பெங்களூரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் ஒரு பகுதியாக, முதல்வர் சித்தராமையாவை காவேரி இல்லத்தில், வால்வோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் லண்ட்ஸ்டெட், அந்த நிறுவனத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் கமல் பாலி நேற்று சந்தித்தனர். ஹொஸ்கோட் பணிமனையை 1,400 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.பின், சித்தராமையா கூறுகையில், ''வால்வோ நிறுவனம் 25 ஆண்டுக்கு முன்பு, கர்நாடக மாநிலத்திற்கு வந்தது. அரசின் உயர்தர சொகுசு பஸ்களை கூட வால்வோ பஸ் என்று தான் மக்கள் அழைக்கின்றனர். வால்வோ நிறுவனத்திற்கு தேவையான வசதிகள், உதவிகளை அரசு வழங்கும். அந்த நிறுவனம் தனது அலுவலகத்தில் அதிக கன்னடர்களை பணி அமர்த்த வேண்டும்,'' என்றார்.சந்திப்பின் போது தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தொழில் துறை முதன்மை செயலர் செல்வகுமார், கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உடன் இருந்தனர்.
18-Jan-2025