உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓட்டுப்பதிவு இயந்திரம்: ரமேஷ் வலியுறுத்தல்

ஓட்டுப்பதிவு இயந்திரம்: ரமேஷ் வலியுறுத்தல்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ள கடிதம்: உள்ளாட்சித் தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்தும் முடிவை நான் கண்டிக்கிறேன். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடக்கும் தேர்தல், நேர்மையானதாக இருக்கும். ஆனால் ஓட்டுச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தினால், காங்கிரஸ் குண்டர் அரசியல் செய்து, தேர்தலை எதிர்கொள்ள முயற்சிக்கும். ஓட்டுச்சீட்டு பயன்படுத்தினால், செல்லாத ஓட்டுகள் அதிகம் இருக்கும். ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அதற்கு வாய்ப்பிருக்காது. இதன் மீது, சந்தேகம் தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில், உச்சநீதிமன்றம், பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலமாக நடக்கும் தேர்தல்கள், நியாமானதாக இருக்கும். முறைகேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை என, தெளிவுபடுத்தியுள்ளன. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை