உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.10 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் காரில் கடத்தி வந்த 10 பேர் கைது

ரூ.10 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல் காரில் கடத்தி வந்த 10 பேர் கைது

குடகு: திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு காரில் கடத்தப்பட்ட, 10 கோடி ரூபாய் மதிப்பிலான, திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.வாசனை திரவியங்கள், சில மருந்துகளை தயாரிக்க திமிங்கலத்தின் எச்சம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் திமிங்கல எச்சத்துக்கு மவுசு அதிகமாக உள்ளது. திமிங்கலத்தை கொன்று எச்சம் எடுக்கப்படுவதால், இந்தியாவில் திமிங்கல எச்சத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி விற்பனை செய்பவர் கைது செய்யப்படுகின்றனர்.இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு காரில், திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக குடகு விராஜ்பேட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெட்டோலி பகுதியில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட இரண்டு கார்களை நிறுத்தினர். கார்களுக்குள் சோதனை நடத்திய போது, ஒரு காரில் திமிங்கல எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது.எடை போட்டு பார்த்த போது 10 கிலோ 390 கிராம் இருந்தது. சர்வதேச சந்தையில் அதன்மதிப்பு 10 கோடி ரூபாய். இரண்டு காரில் வந்த ஷிவமொக்காவின் சம்சுதீன், 45, திருவனந்தபுரத்தின் நவாஸ், 54, லத்தீஷ், 53, ரிஜேஷ், 40, பிரசாந்த், 52, ராகவேந்திரா, 48, பாலசந்திர நாயக், 55, சாஜு தாமஸ், 58, ஜோபிஸ், 33, ஜிஜேஷ், 40 ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவனந்தபுரத்தில் இருந்து கடத்தி வந்ததை ஒப்பு கொண்டனர். கைதானவர்களிடம் இருந்து இரண்டு பணம் எண்ணும் இயந்திரங்கள், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ