கூறியது நடந்துவிட்டது மாஜி எம்.பி., தாக்கு
மைசூரு: மாநிலத்தில் தலிபான் அரசு ஆட்சி அமையும் என்று கூறியிருந்தேன். அது நடந்துவிட்டது,'' என, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த மாதம் குடகுவில் வினய் சோமய்யா, தன் சாவிற்கு எம்.எல்.ஏ., பொன்னன்னா தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மே 2ம் தேதி மங்களூரில் பஜ்ரங் தள் பிரமுகர் சுஹாஸ் ஷெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தலின்போதே, 'கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலிபான் அரசு தான் நடக்கும்' என்று கூறிருந்தேன். அதுபோன்றே சமீபத்திய சம்பவங்கள் நடந்து வருகின்றன.முதல்வர் சித்தராமையாவை ஆட்சியில் இருந்து துாக்கும் வரை, ஹிந்து பிரமுகர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். முஸ்லிம்களின் ஓட்டு வங்கிக்காக, ஹிந்துக்கள் மீது கொடுமைகளை காங்கிரஸ் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.