உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக அரசின் கல்வி கொள்கை வெளியாவதில் தாமதம் ஏன்?

கர்நாடக அரசின் கல்வி கொள்கை வெளியாவதில் தாமதம் ஏன்?

பெங்களூரு : பள்ளிகள் திறக்கப்படுவதால் கர்நாடக மாநில அரசின் புதிய கல்வி கொள்கை குறித்த கன்னட அறிக்கை தாமதமாவதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையை கர்நாடகாவில் அமல்படுத்த காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.இதனால், மாநில அரசு பிரத்யேகமான கல்வி கொள்கையை உருவாக்க 2023ல் பேராசிரியர் சுகதேவ் தலைமையில் ஆணையம் உருவாக்கப்பட்டது.இந்த குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே சமர்ப்பித்தது. இதனால், மாநில அரசு அதிருப்தி அடைந்தது. விரைவில் முழு அறிக்கையை சமர்ப்பிக்கும் படி முதல்வர் சித்தராமையா வலியுறுத்தினார்.இதையடுத்து, ஆங்கிலத்தில் 1,000 பக்கம் கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளதாக குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கன்னடத்தில் மொழி பெயர்க்க கால அவகாசம் கேட்கப்பட்டது.மாநில கல்வி கொள்கை குறித்த அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்குமாறு ஆணையத்திற்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.இதனால், இம்மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமர்ப்பிக்கபட்டவுடன், அரசு உடனடியாக முடிவு எடுக்கும் என தெரிய வருகிறது.ஒரு வேளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வில்லை என்றால், ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ