உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கூலிப்படை அமர்த்தி கணவரை கொலை செய்த மனைவி கைது

 கூலிப்படை அமர்த்தி கணவரை கொலை செய்த மனைவி கைது

மைசூரு: மனைவி ஏவிய கூலிப்படையினர் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்தார். மனைவி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மைசூரு நஞ்சன்கூடை சேர்ந்தவர் ராஜேந்திரா, 30. பைபர் ஆப்டிக் கேபிள் பிட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா, 25 கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். அக்டோபர் 25ம் தேதி கணவனும், மனைவியும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார், ராஜேந்திரா பைக் மீது மோதியது. இருவரும் கீழே விழுந்தனர். சங்கீதாவின் கழுத்தில் இருந்த தங்க செயின்களை பறித்தனர். ராஜேந்திராவை ஒருவர் கத்தியால் குத்தினார். அதற்குள் அவ்வழியாக மற்றொரு கார் வருவதை பார்த்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படுகாயம் அடைந்த ராஜேந்திரா, மைசூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து நஞ்சன்கூடு போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில் சங்கீதாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதேவேளையில், ராஜேந்திராவின் குடும்பத்தினரும், சங்கீதா மீது புகார் அளித்தனர். அவரிடம் விசாரித்தபோது, உண்மையை ஒப்புக் கொண்டார். கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், தம்பி சஞ்சய், அவரது நண்பர் விக்னேஷ் மற்றும் மைனர் சிறுவன் உட்பட நான்கு பேர் திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் மருத்துவமனையில் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்