உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறையில் தர்ஷனை சந்தித்த மனைவி

 சிறையில் தர்ஷனை சந்தித்த மனைவி

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், கைதான நடிகர் தர்ஷன், ஓராண்டுக்கும் மேலாக பெங்களூரின் பரப்பன அக்ரஹரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 4:00 மணிக்கு இவரது மனைவி விஜயலட்சுமி, சிறைக்கு வந்தார். முறைப்படி அனுமதி பெற்று, சிறைக்குள் சென்று தர்ஷனை சந்தித்தார். கணவருக்காக கொண்டு வந்த பழங்கள், தின்பண்டங்களை கொடுத்தார். 5:30 மணி வரை கணவரும், மனைவியும் பேசினர். பின், விஜயலட்சுமி சிறையில் இருந்து வெளியேறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !