கணவரை கொன்று நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் கைது
துமகூரு : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்று, நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.தும்கூரு மாவட்டம், திப்டூரின் காடுஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி, 50. இவரது மனைவி சுமங்களா. கல்பட்டரு கல்லுாரியின் பெண்கள் விடுதியில் சமையல் செய்யும் ஊழியராக சுமங்களா பணியாற்றி வருகிறார்.இம்மாதம் 25ம் தேதி கணவரை காணவில்லை என்று நோனவினகெரே போலீசில் சுமங்களா புகார் அளித்தார். விசாரணை நடத்த, சுமங்களாவின் வீட்டுக்கு போலீசார் சென்றனர்.துாங்கும் அறையில் துாள் உப்பு சிதறிக் கிடந்தது. வீட்டின் பின்புறம் சென்றபோது, ஏதோ பொருளை இழுத்துச் சென்ற தடயம் இருந்தது.சந்தேகம் அடைந்த போலீசார், சுமங்களாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.விசாரணையில் சுமங்களா அளித்த தகவல் குறித்து போலீசார் கூறியது:சுமங்களாவுக்கும், கரடலு சந்தே கிராமத்தை சேர்ந்த நாகராஜு என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சங்கரமூர்த்தி, மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவரை கொல்ல நாகராஜுடன் இணைந்து சுமங்களா திட்டமிட்டார்.அதன்படி, இம்மாதம் 24ம் தேதி சங்கரமூர்த்தி வீட்டில் இருந்தபோது, அங்கு நாகராஜை சுமங்களா வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து சங்கரமூர்த்தி முகத்தில் துாள் உப்பை வீசியுள்ளனர்.அவரை கீழே தள்ளி, உருட்டுக் கட்டையால் அடித்துள்ளனர். அவரின் கழுத்தின் மீது ஏறி நின்று சுமங்களா கொலை செய்துள்ளார். சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, துருவரகெரே தண்டனசிவரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீசினர்.சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.