மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவு
16-Oct-2026
பெங்களூரு: ‘‘இன்னும் ஓராண்டே நீங்கள் அமைச்சராக இருப்பீர்கள். அதன் பின் மக்கள் உங்களை துாக்கி வீசுவர். ஆர்.எஸ்.எஸ்., பற்றி பேசும் முன் கவனமாக இருக்க வேண்டும்,’’ என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறினார். பெங்களூரு ஜெயநகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., விஜயதசமி ஊர்வலம் துவங்குவதற்கு முன், அசோக் அளித்த பேட்டி: காங்கிரசுக்கு பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்காவில் இருந்து நிதி வருகிறது. உங்களை போன்ற கரப்பான் பூச்சிகளுடன் நாங்கள் கலந்து கொண்டு, வெளிநாட்டு நிதியை கொண்டு வர மாட்டோம். ஆர்.எஸ்.எஸ்., என்பது தேச பக்தியை ஊக்குவிக்கும் அமைப்பாகும். ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவை நேசிக்கும் ஓர் அமைப்பு. ஆர்.எஸ்.எஸ்., பற்றி முதல்வர் பேசட்டும், நாங்கள் பதில் அளிக்கிறோம். நீங்கள் ஓர் அமைச்சர், உங்களுக்கு இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. அதன் பின், மக்கள் உங்களை துரத்தி விடுவர். நீங்கள் நேற்று அமைச்சரானீர்கள். பலர் பல ஆண்டுகளாக அமைச்சர்களாக பணியாற்றி வருகின்றனர். முதல்வர் சிவகுமார் பேசட்டும், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்; உங்களுக்கு கோபம் இருந்தால், சிவகுமாரிடம் பேசுங்கள்; பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
16-Oct-2026