உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் சில அமைச்சர்களின் செயல்பாடு சரியில்லை. திறமையற்ற அமைச்சர்களை பதவியில் இருந்து, முதல்வர் சித்தராமையா நீக்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாம். அமைச்சர்கள் செயல்பாடுகளில் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் இல்லை, மக்கள் கூட அதிருப்தியில் உள்ளனர். ஐந்து, ஆறு முறை எம்.எல்.ஏ., ஆனவர்களுக்கு கூட, அமைச்சர் பதவி கிடைப்பது இல்லை. ஒன்று, இரண்டு முறை வெற்றி பெற்றவர்கள் எப்படியாவது அமைச்சராகி விடுகின்றனர். ஹொன்னாளி எம்.எல்.ஏ., சாந்தனகவுடா நல்ல மனிதர். அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். பசவராஜ் சிவகங்கா, எம்.எல்.ஏ., - காங்., சென்னகிரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ